நாளை முதல் விருதுநகர் முழுவதும் பட்டாசு ஆலைகள் மூடல்! கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை!!

நாளை முதல் விருதுநகர் முழுவதும் பட்டாசு ஆலைகள் மூடல்! கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை!!

நாளை முதல் விருதுநகர் முழுவதும் பட்டாசு ஆலைகள் மூடல்! கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை!!
X

நாளை ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்படும் என்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் கூறினார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, தற்போது பட்டாசு ஆலைகள் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விருதுநகரில் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூட்டம், இன்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஜூலை 9ம் தேதி (நாளை) முதல் 19ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

newstm.in

Next Story
Share it