அமெரிக்கா விமானத்தில் திடீர் தீ விபத்து..!

அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் இருந்து 104 பயணிகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் நியூயார்க் புறப்பட்டது.ஆனால் அந்த விமானம் ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்தபோது அதன் இறக்கையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்களை வெளியேற்றும்படி அலறினர். உடனே விமானம் டேக் ஆப் ஆவது செய்வது ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை விமானி முன்கூட்டியே அறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஹூஸ்டன் விமான தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்துகள் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு சம்பவம் அரங்கியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.