1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசின் ஜிஎஸ்டி-யில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கிய பொறுப்பு !!

மத்திய அரசின் ஜிஎஸ்டி-யில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கிய பொறுப்பு !!

ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதலமைச்சர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி-யில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கிய பொறுப்பு !!

இந்த குழு ஜிஎஸ்டி தொடர்பான பல்வேறு முடிவுகளை எடுக்க பரிந்துரைக்கும், மாநில அரசின் நிலவரங்களை குறிப்பிடும் என தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்த குழுவில் தாம் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


newstm.in

Trending News

Latest News

You May Like