அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம்.. ராகுல்காந்தி  

 | 

இந்தியாவில் இன்னும் 2 ஆண்டுகளில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. எனினும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல், தலைவர்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. சோனியாகாந்தி அவ்வப்போது தலைவர்களை அழைத்து சமாதானம் பேசினாலும் தீர்ந்தபாடில்லை.

ஏற்கனவே இரண்டு முறை பாஜகவுக்கு ஆட்சியை எதிர்கட்சிகளே வழங்கியது என குற்றச்சாட்டு உள்ளது. இந்த வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் இப்போதே முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் ராகுல்காந்தி விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனிடையே அதிருப்தியாளர்களுக்கு ராகுல்காந்தி முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த 3,500 உறுப்பினர்களிடம் காணொலிமூலம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி பேசினார். அப்போது பேசிய அவர், யதார்த்த நிலையையும், பாரதிய ஜனதாவையும் கண்டு அஞ்சும் காங்கிரஸ்காரர்கள் கட்சியைவிட்டு தாராளமாக வெளியேறலாம் . காங்கிரஸிற்கு வெளியே உள்ள தைரியமான தலைவர்கள் கட்சிக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் காங்கிரஸிற்கு தேவையில்லை. அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை சுட்டிக்காட்டி இவ்வாறு ராகுல் காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in


 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP