சொந்த மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை! போக்சோவில் சிறையிலடைந்த போலீசார்!

மகளுக்கு தொல்லை அளித்த கொடூர தந்தை போக்சோவில் கைது..!
 | 

சொந்த மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை! போக்சோவில் சிறையிலடைந்த போலீசார்!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனி (45) என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் தாயார் வீட்டில் அவருடன் வசிக்கிறார். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பழனி தனது மனைவியின் வீட்டுக்கு வந்தார். அங்கு மனைவியும், மூத்த மகளும் இல்லாத நிலையில் இளைய மகள் மட்டும் தனியாக இருந்தார்.

சொந்த மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை! போக்சோவில் சிறையிலடைந்த போலீசார்!அப்போது பழனி அந்த சிறுமியிடம் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தாய் வீட்டுக்கு வந்ததும் அவரிடம் தனக்கு நேர்ந்த கொடூமை குறித்து மகள் அழுதபடி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியின் மனைவி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சொந்த மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை! போக்சோவில் சிறையிலடைந்த போலீசார்!

போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP