தந்தை, மகன் பலி : தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!

தந்தை, மகன் பலி : தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!

தந்தை, மகன் பலி : தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!
X

தூத்துக்குடியில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் தா.வெள்ளையன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மரக்கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையை அடுத்து உயிரிழந்ததாக தெரிகிறது. விசாரணைக் கைதிகள் இருவரும் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியும் காவலர்கள் கடுமையாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்து இருப்பதாகாவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை முழு கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் தா.வெள்ளையன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு தலா ஒரு ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவியும் அரசு வேலையும் வழங்க வழங்க வேண்டும் என்றும்  இறப்பிற்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

Next Story
Share it