1. Home
  2. தமிழ்நாடு

வெப்பம் காரணமாக வீட்டின் முன்பு படுத்த தந்தை, மகள்கள்.. திடீரென நேரிட்ட சோகம்..!

வெப்பம் காரணமாக வீட்டின் முன்பு படுத்த தந்தை, மகள்கள்.. திடீரென நேரிட்ட சோகம்..!


சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் வசிப்பவா் ராஜாங்கம். பெயிண்டராக வேலை செய்து வந்த இவர், தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வீட்டிற்குள் புழுக்கம் அதிகமாக இருக்கிறது என, இரவு வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் கட்டிலைப் போட்டு அமர்ந்துள்ளார்.

 அப்போது ராஜாங்கத்தின் மகள்களான, கலா மற்றும் சுமித்திரா ஆகிய இருவரும் அப்பாவுடன் அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளார்கள்.

இந்நிலையில் அவர்கள் கட்டிலை போட்டு அமர்ந்திருந்த இடத்தை சுற்றி காலி சுவர் ஒன்று இருந்துள்ளது. மிகவும் பழமையான, சேதமடைந்த அந்த சுவர், மூவரும் அமர்ந்து இருந்த கட்டிலின் மீது பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. 

இதனை சற்றும் எதிர்பாராத மூவரும், இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி துடித்துள்ளார்கள். இதனிடையே மூவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜாங்கம் உயிரிழந்தார். மகள்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் இன்று காலை உயிரிழந்தனர்.

வெப்பம் காரணமாக வீட்டின் முன்பு படுத்த தந்தை, மகள்கள்.. திடீரென நேரிட்ட சோகம்..!

இச்சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகள்கள் உட்பட 3 போ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ராஜாங்கத்தின் வீட்டுக்கு தாம்பரம் தாசில்தார் சரவணன், சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் ஆகியோர் நேரில் சென்றனர். ராஜாங்கத்தின் குடும்பத்தாருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். உடல் அடக்கத்திற்கும், நிவாரணத் தொகை பெறவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like