1. Home
  2. தமிழ்நாடு

அருமையான வாய்ப்பு... மிஸ் பண்ணிடாதீங்க! அஞ்சல் துறையில் வேலை…!

Q

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 344 பணியிடங்கள் உள்ளன. இதில், டில்லியில் 6 பணியிடங்களும், கர்நாடகாவில் 20 பணியிடங்களும், கேரளாவில் 4 பணியிடங்களும், தமிழகத்தில் 13 பணியிடங்களும், தெலுங்கானாவில் 15 பணியிடங்களும் உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் ரூ.750.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like