"என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" புகழ் பாடகர் காலமானார்!

 | 

பிரபல நடிகரும், தெம்மாங்கு பாடகருமான  TKS நடராஜன் காலமானார். அருக்கு வயது 87.

TKS நடராஜன் 1933ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 23ஆம் தேதி பிறந்தார். இவர் நாடகத்துறையில் புகழ்வாய்ந்த டிகேஎஸ் கலைக்குழுவில், சிறுவனாக இருந்தபோது சேர்ந்து நடித்தார். எனவே பெயருக்கு முன்னாள் டிகேஎஸ் என்ற அடைமொழியோடு டிகேஎஸ் நடராஜன் என அழைக்கப்படுகிறார்.

1954 இல் வெளியான ரத்தபாசம் படத்தில் டிகேஎஸ் நடராஜன் நடிகராக அறிமுகம் ஆனார். அதன்பிறகு நாடோடி, நீதிக்கு தலைவணங்கு, தேன்கிண்ணம், மங்களவாத்தியம், உதயகீதம், ஆனந்த கண்ணீர், காதல் பரிசு போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

வாங்க மாப்பிள்ளை வாங்கி என்ற படத்தில் சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற தெம்மாங்கு பாடல் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது.

"கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து டிகேஎஸ் நடராஜன் தெம்மாங்கு கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.

அவர் பாடிய என்னடி முனியம்மா பாடல் நடிகர் அர்ஜூன் நடித்த 'வாத்தியார்' படத்தில் ரீமிக்ஸ் செய்திருந்தனர். அதிலும் டிகேஎஸ் நடராஜன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து தொடங்குகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP