பிரபல வசனகர்த்த மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி..!

 | 

பிரபல வசனகர்த்தா குரு காஷ்யப் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45.

புஷ்பக விமானா, இன்ஸ்பெக்டர் விக்ரம், தேவகி உள்பட 15 கன்னட படங்களுக்கு வசனம் எழுதியவர் குரு காஷ்யப். 45 வயதான குரு காஷ்யப் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர். விரைவில் வெளியாகவிருக்கும் மான்சூன் ராகா, பைரகி ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு குரு காஷ்யப் மாரடைப்பால் மரணம் அடைந்தார். குருவின் மரண செய்தி அறிந்த கன்னட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். குரு பற்றி அவர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,

உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் குரு காஷ்யப். போகும் வயதா இது. நீங்கள் ஒரு நல்ல வசனகர்த்தா மற்றும் சிறந்த மனிதர். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவோம். குரு காஷ்யப் உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

அதிர்ச்சியாக இருக்கிறது. எப்பொழுதும் பொறுமையாக இருப்பவர். சிரித்த முகமாக இருக்கும் குருவுக்கு இப்படி ஒரு முடிவு என்பதை நம்ப கஷ்டமாக இருக்கிறது. கன்னட திரையுலகிற்கு இது பெரும் இழப்பு என்று தெரிவித்துள்ளனர்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP