கார் விபத்தில் சிக்கினார் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்!

அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பயணித்த கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
டைகர் உடஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே ரோலிங் ஹில் எஸ்டேட்ஸ் பகுதியில் காரில் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் விபத்துக்குள்ளானது. அதில் கார் புல்வெளியில் கவிழந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்தனர். உடனடியாக டைகர் உட்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த கோல்ப் வீரரான இவர் 15 முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தான் இவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது விபத்து காரணமாக காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
newstm.in