பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் உடல்நிலை கவலைக்கிடம் ! உதவிகரம் நீட்டும் நடிகர் சோனு சூட் !

 | 

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக  பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். பூவே உனக்காக, விஷ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

master siva

குறிப்பாக தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அஜித் நடித்த வரலாறு, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பாலாவின் பரதேசி, சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர், அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூவரில் சிவசங்கர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

a

சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைக்கு அதிக செலவாகிறது என்றும், தனது குடும்பத்தினரால் அவ்வளவு பணத்தை செலுத்த முடியவில்லை என்றும், சிவசங்கரின் மருத்துவச் செலவுக்கு உதவும்படி அவரது மகன் அஜய் முரளி கிருஷ்ணா சமூக வலைத்தளத்தில் உதவி கேட்டுள்ளார். இந்நிலையில், சிவசங்கர் உடல்நிலை பற்றி அறிந்த நடிகர் சோனு சூட் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், ‘நான் ஏற்கனவே அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது உயிரைக் காப்பாற்ற என்னால் முடிந்ததை செய்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP