கொரோனா நிவாரணத்திற்கு ரூ.4,00,00,000 வழங்கிய பிரபல நடிகர்!

 | 

கொரோனா நிவாரண நிதியாக பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில், பாகுபலி திரைப்படம் மூலம் உலக முழுவதும் பிரபலமான பிரபாஸ் 4 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 3 கோடி ரூபாய் பிரதமரின் நிவாரண நிதிக்கும், 50 லட்ச ரூபாய் ஆந்திர மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், 50 லட்ச ரூபாய் தெலங்கானா மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் நிஜ வாழ்க்கையிலும் தான் ஒரு பாலிபலி என்பதை பிரபாஸ் நிரூபித்துள்ளார். முன்னதாக பல தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP