குடும்ப சண்டை !! உதய நிதியை தாண்டி ஸ்கோர் செய்யவே கனிமொழி பேசுகிறார் !! அமைச்சர்...

குடும்ப சண்டை !! உதய நிதியை தாண்டி ஸ்கோர் செய்யவே கனிமொழி பேசுகிறார் !! அமைச்சர்...

குடும்ப சண்டை !! உதய நிதியை தாண்டி ஸ்கோர் செய்யவே கனிமொழி பேசுகிறார் !! அமைச்சர்...
X

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் ; தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இந்த மண்டலத்தில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் , எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து விட்டது என்று மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கையை மறைத்து மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

நேற்று வரையில் குணமடைந்தோர் போக தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 42ஆயிரத்து 955 மட்டுமே எனவும் சென்னை உட்பட தமிழகம் முழுதுமே 2000 பேரில் ஒருவருக்கு என்ற அளவில் தான் கொரோனா தொற்று உள்ளதாகவும் , ஸ்டாலின் மக்கள் மத்தியில் நம்பிக்கை விதையை தூவுவதை விடுத்து நச்சு விதையை தூவி வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு தன்னால் இயன்ற அளவுக்கு தனது சக்தியை மீறி செலவு செய்து வருவதாக தெரிவித்த அவர், மக்களுக்கு அரசின் நிதி உதவி போதுமானதாக இல்லை என்று குறை சொல்லும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது கட்சியின் நிதியிலிருக்கும் 300 கோடியிலிருந்தும் , ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் வசூல் செய்த தொகையிலும் அரசிற்கு நிதி உதவி கொடுக்கலாமே என்று கேள்வி எழுப்பினார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்த அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையே தமிழக அரசின் துரித நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் , உடனடியாக தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டது தொடங்கி , கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது வரை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாத்தான் குளம் விவகாரத்தில் கனிமொழி அரசியல் செய்து வருவதாகவும், குடும்ப சண்டையில் யார் மேலே,யார் கீழே என்ற போட்டியில், உதயநிதியை தாண்டி ஸ்கோர் செய்யவே கனிமொழி இவ்வாறு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

Newstm.in

Next Story
Share it