1. Home
  2. தமிழ்நாடு

300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும் !! மின்சாரத்துறை அமைச்சர்

300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும் !! மின்சாரத்துறை அமைச்சர்


இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று வெளியிட்ட அறிக்கையில் ; தமிழ்நாட்டில் தரமான மின்சாரம் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி , தமிழ்நாடு தொடர்ந்து மின்மிகை மாநிலமாகவும் திகழ்ந்து வருகின்றது.

மின் நுகர்வு இரண்டு மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி மின் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யும்பொழுது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு முதல் கொண்டு வந்த 100 யூனிட்டுகள் இலவச மின்சாரப் பயனை அனைத்து வீட்டு மின் உபயோகிப்பாளருக்கும் வழங்கிய பின்பு கணக்கீடு செய்து, மீதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தனித்தனியே 100 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு கணக்கீடு செய்தது விதிகளுக்கு உட்பட்டதே என்றும் , அது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நேர்மைத் தன்மையைக் காட்டுகிறது எனவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கண க்கீடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், ஒவ்வொரு நுகர்வோரும் தனித்தனியே அவர்களுடைய கணக்கீட்டு முறையை வெளிப்படையாகவும் , தெளிவாகவும் காணும் வகையில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கணக்கீட்டில் சந்தேகம் ஏதும் இருக்கும் பட்சத்தில், நுகர்வோர்கள் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அளித்தார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான தற்போதைய மின் கட்டணம், அதன் உற்பத்தி செலவை விட மிக, மிக குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும், அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவாக உள்ள நிலையில், கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லாபம் பார்க்கின்றது என கூறுவதிலும் , எள்ளளவும் உண்மை இல்லை.

முந்தைய திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, தொலைநோக்குடன் தனது திடமான செயலாற்றலால், மின்மிகை மாநிலமாக மாற்றி ஒளிரச்செய்த ஜெயலலிதா 2016-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், ஒவ்வொரு வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க ஆணையிட்டார். இதன் மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like