தங்கை கணவருடன் கள்ளக்காதல்.. வீடியோ வெளியிட்டு இளம்பெண் பகீர் முடிவு !!

 | 

தங்கை கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தற்கொலை செய்து கொண்ட பெண் அதற்கு முன்னால் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.  

காஞ்சிபுரம் மாவட்டம்  குன்றத்தூர் அடுத்தவட்டம் வரதராஜபுரம் பகுதியில் பொன்னுரங்கம் - செண்பகவல்லி தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது லாவண்யா இறந்துவிட்டார். பின்னர் கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு ஆண்டாக பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த செண்பகவல்லி  அடிக்கடி ஜோசப்வுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு சென்பகவள்ளி தற்கொலை செய்து கொண்டார்.   

அதில் தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் சோமங்கலம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை கைது செய்தனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP