போலி மின்னஞ்சல் வழக்கு : மாரிதாஸ் மீண்டும் கைது!!

 | 

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூபர் மாரிதாஸ், தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில்,  அவரது மரணத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த காவலர்களே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் காரணம் இல்லை என கூறப்பட்டது.

ஆனால், மாரிதாஸ் என்பவர் தொடர்ந்து அவதூறு பரப்பிவந்தார். இந்நிலையில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த மாரிதாஸ் சற்று நேரத்தில் தனது கருத்தை டெலிட் செய்தார்.

maridhas

சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக கூறி காவல்துறை அவரை கைது செய்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் மாரிதாஸை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அவரது போலி மின்னஞ்சல் வீடியோவால் பல  பத்திரிகையாளர்கள் வேலை இழந்தனர். இதையடுத்து அந்த மின்னஞ்சல் தங்களால் அனுப்பப்பட்டதல்ல, அது போலியானது என செய்தி நிறுவன நிர்வாகி வினய் சார்வாகி குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த வழக்கில் மாரிதாஸை கைது செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP