ஏழுமலையான் தரிசனம் !! இன்று முதல் தினசரி 12 ஆயிரத்து 750 பேர் அனுமதி !! தேவஸ்தானம்

ஏழுமலையான் தரிசனம் !! இன்று முதல் தினசரி 12 ஆயிரத்து 750 பேர் அனுமதி !! தேவஸ்தானம்

ஏழுமலையான் தரிசனம் !! இன்று முதல் தினசரி 12 ஆயிரத்து 750 பேர் அனுமதி !! தேவஸ்தானம்
X

கொரோனா பாதிப்பு உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு தற்போது 5 லட்சத்தை தொட இருக்கிறது. முன்னதாக மத்திய அரசு சார்பில் பொது போக்குவரத்து , மக்கள் அதிகம் கூடும் இடங்களான சமூக கூடங்கள் , திரையரங்கள் போன்ற பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

பின்பு சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில் சில மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் கொரோனா பொது முடக்க தளர்வுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 8 ம் தேதி முதல் சோதனை முறையில் இரண்டு நாட்களுக்கு தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதனையடுத்து 11ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் அடுத்த கட்டமாக இன்று முதல், நாள் ஒன்றுக்கு 12,750 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஜூன் 30 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it