மின் கட்டணம் செலுத்த இங்கெல்லாம் கால அவகாசம் நீட்டிப்பு!

மின் கட்டணம் செலுத்த இங்கெல்லாம் கால அவகாசம் நீட்டிப்பு!

மின் கட்டணம் செலுத்த இங்கெல்லாம் கால அவகாசம் நீட்டிப்பு!
X

கொரோனா பாதிப்பு எல்லா தரப்பினரையும் கடுமையாக முடக்கியுள்ளது. பலரது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு சார்பில் பல அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் மின்கட்டணம் கட்டுவதற்கான கால அவகாசமும் ஒன்று.

முன்னதாக முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இதேபோல் தேனி, போடி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 5 நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.    

newstm.in

Next Story
Share it