நடமாடும் காய்கறி கடைகளுக்கான அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வேலுமணி அறிவிப்பு!

நடமாடும் காய்கறி கடைகளுக்கான அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வேலுமணி அறிவிப்பு!

நடமாடும் காய்கறி கடைகளுக்கான அவகாசம் நீட்டிப்பு! அமைச்சர் வேலுமணி அறிவிப்பு!
X

சென்னையில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நடமாடும் காய்கறி அங்காடிகளை சென்னையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்திருந்தது. 

நடமாடும்‌  காய்கறி வண்டிகளில் காய்கறி விற்பவர் முகக்கவசம் மற்றும் கையுறைகள்‌ போன்றவற்றை அணிந்திருந்தனர்.  மாநகராட்சி சார்பில் அந்த வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள்‌ வழங்கப்பட்டு இருந்தன. 

தற்போது முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு பழைய தளர்வுகளுடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அல்லது  ஊரடங்கு முடிந்து மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்  வரை நடமாடும் அங்காடிகள் செயல்படும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it