விவசாயிகளுக்கான சலுகைகள் நீட்டிப்பு - எடப்பாடி அதிரடி!

விவசாயிகளுக்கான சலுகைகள் நீட்டிப்பு - எடப்பாடி அதிரடி!

விவசாயிகளுக்கான சலுகைகள் நீட்டிப்பு - எடப்பாடி அதிரடி!
X

ஊரடங்கு பாதிப்பிலிருந்து விவசாயிகளை காப்பதற்காக  அறிவிக்கப்பட்ட சலுகைகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் விளைப்பொருட்களை சேமித்து வைக்க அரசு கிடங்குகளை மே மாதம் 30ஆம் தேதி வரை கட்டணமின்றி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம், கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைப்பொருட்களை அடமானம் வைத்து அதன் பேரில் வழங்கப்படும் பொருளீட்டுக்கடனுக்கான 5சதவீத வட்டியை மேலும் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் மாம்பழ விளைச்சல் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற சலுகையும் மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக்கிடங்கில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it