இரண்டாது நாளாக விலை உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

 | 

தேர்தல் முடிந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்ததும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. அதே போல் தற்போது மீண்டும் விலை உயர்வு தொடர்கிறது.

நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 92.70 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

டீசல் விலை இன்று ஒரே நாளில் 19 காசுகள் உயர்ந்து 86.09 ரூபாய்க்கு விற்பனையாகின்றன. விலை உயர்வு தொடர்ந்தால் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல்  100ரூபாயும், டீசல் 90ரூபாயும் தொட்டு விடும் அபாயம் உள்ளது.

அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP