பரபரப்பு.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி !

 | 

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திடீரென உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவருக்கு இதய அடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதயப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வத்துக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

mrk pannirselvam

திமுகவில் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றிருந்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கட்சிக்காக நெடுங்காலமாக தீவிரமாக உழைத்துவருபவர். இதனால் திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல்கள் பரவியதும் திமுகவினர் பதற்றம் அடைந்தனர். சிலர் தனியார் மருத்துவமனை பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

newstm.in

 
 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP