1. Home
  2. தமிழ்நாடு

சில நொடிகளில் எல்லாமே மாறிப் போனது...வெளியான பேருந்து விபத்து வீடியோ..!

1

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால் தென்னக ரயில்வே தனியாக சிறப்பு ரயில்களை கூட அவ்வப்போது ஏற்பாடு செய்வது உண்டு. இந்த நிலையில் தற்போது மேல்மருவத்தூர் சீசன் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள் ரயில்கள் மூலம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பக்தர்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

அப்படி பக்தர்கள் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளான பதைபதைக் வைக்கும் காட்சிகள் தான் தற்போது வெளியாகி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாராபட்டி அருகே எட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் சுமார் மூன்று பேருந்துகளில் சென்னை நோக்கி சென்றனர். ஊத்தங்கரை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் உட்பட 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

தகவல் அறிந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த சிலர் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் ஊத்தங்கரை பேருந்து விபத்தில் சிக்கியவர்கள் பேருந்துக்குள் சாமி பாடலுக்கு நடனம் ஆடிய படி சென்றதும் திடீரென விபத்தில் சிக்கி அவர்கள் அலறிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் செவ்வாடை அணிந்த பெண்கள் சிறுமிகள் உள்ளிட்டோர் கையில் வேப்பிலையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

பேருந்தில் உற்சாகமாக ஆடிக் கொண்டிருக்கும் போது திடீரென பேருந்து பள்ளத்தில் கவிழ்கிறது. அப்போது அலறிய அவர்கள் காயங்களுடன் இருப்பது போல் அந்த வீடியோ இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் அவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


 

Trending News

Latest News

You May Like