1. Home
  2. தமிழ்நாடு

அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வளைதளங்களில் பதிவிடுங்கள் !! கேப்டன் விஜயகாந்தின் சேலன்ஜ்

அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வளைதளங்களில் பதிவிடுங்கள் !! கேப்டன் விஜயகாந்தின் சேலன்ஜ்


பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உடனே எல்லோரும் மாஸ்க் அணிந்து செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் என தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

அனைவரும் மாஸ்க் அணிந்து சமூக வளைதளங்களில் பதிவிடுங்கள் !! கேப்டன் விஜயகாந்தின் சேலன்ஜ்

கொரோனா வைரஸ்‌ உலகையே அச்சுறுத்திக்‌ கொண்டிருக்கும்‌ இந்த நேரத்தில்‌ தமிழகத்தில்‌ கொரோனா வைரஸ்க்கு எதிராக ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம்‌ முடிந்து மே 3ம்‌ தேதி வரைக்கும்‌ நீட்டிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில்‌ மக்களிடையே மேலும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ ஒட்டு மொத்த தமிழக மக்களும்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள்‌ முதல்‌ தொண்டர்கள்‌ வரை அனைவருமே, அவரவர்கள்‌ முகத்தில்‌ முககவசம்‌ அணிந்து மொபைல்‌ போனில்‌ செல்‌பி படம்‌ எடுத்து டிபியாக அதை சமூக வலைதளங்களில்‌ பதிவிட்டு முககவசத்தின்‌ அவசியத்தை வலியுறுத்தும்‌ வண்ணம்‌ விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைந்து ஏற்படுத்த வேண்டும்‌ என தமிழக மக்களையும்‌, தேமுதிக தொண்டர்களையும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

Trending News

Latest News

You May Like