200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க., பகல் கனவு காண்கிறது - இ.பி.எஸ்..!
சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. லோக்சபா தேர்தலில் சரியாக கூட்டணி அமையவில்லை என்று விமர்சனம் எழுந்தது. கூட்டணி என்பது அவ்வபோது வரும் போகும். ஆனால் அ.தி.மு.க., கொள்கை நிலையானது.நம்முடைய பலம் வலிமையானது. எந்த கட்சிக்கு இல்லாத தொண்டர்கள் நிறைந்த ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டும் தான். தமிழகம் மட்டும் அல்ல. இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
ஆனால், உண்மையான உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே. மற்ற கட்சிகள் எல்லாம் விளம்பரத்தின் மூலம் தங்களுக்கு இத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று காட்டி கொள்வார்கள்.ஆனால் அ.தி.மு.க., ஆட்சி வர வேண்டும் என நினைக்கிறவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி இருக்கிறோம். லோக்சபா தேர்தலில் சிந்தித்து பார்க்க வேண்டும். பலமுறை பல கூட்டத்தில் பேசி இருக்கிறேன்.
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 1,98,369 ஓட்டுக்கள் குறைவாக பெற்ற காரணத்தால் ஆட்சிக்கு வர முடியவில்லை. 1,98,369 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். பெரும்பான்மையான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை. குறைவான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க., கூறுவது அ.தி.மு.க.,வுக்கு தான் பொருந்தும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என தி.மு.க., பகல் கனவு காண்கிறது. அது நிறைவேறாது.
பொய்யான வாக்குறுதிகளை கறி மக்களை ஏமாற்றி தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 18.28% ஓட்டுக்களை பெற்றுள்ளது. அரை சதம் குறைவாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. 2014ல் 8 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் 5.56%, ஆனால் தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது. பா.ஜ., கூட்டணியை விட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது. தி.மு.க.,வை ஊடகங்களும், பத்திரிகைகளும் தாங்கி பிடிக்கிறது. அதனால் அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
யானையின் பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை. தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் நிதி நிலைமை படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் கிண்டல் செய்கின்றனர். எவ்வளவு தூரம் ஸ்டாலின் நெருக்கடி கொடுக்கிறாரோ அவ்வளவு தூரம் அ.தி.மு.க., வளரும். கனிமொழி இறுமாப்புடன் சொல்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்கிறார். அவரது கனவு பலிக்காது. அ.திமு.கவின் எழுச்சி வரும். சட்டசபை தேர்தலில் தெரியும். 200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என வருடத்திற்கு ரூ.3600 கோடி அளவுக்கு தி.மு.க., ஊழல் செய்கிறது . தி.முக., கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கை உடையவை என்றால் அக்கட்சியில் இணைந்துவிட வேண்டியது தானே? உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியது தான் தி.மு.க.,வின் சாதனை.
தி.மு.க., ஊழலின் ஊற்றுக்கண். அ.தி.மு.க.,வில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்க வேண்டும். தி.மு.க., ஆட்சியை மக்கள் வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். அ.தி.மு.க., ஆட்சி மலரும் என்று எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க., தான் ஜனநாயகம் கொண்ட இயக்கம். மக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்களே அஞ்சுகிறார்கள். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது; மக்கள் விழித்துக் கொள்வார்கள். 234 தொகுதிகளிலும் சூறாவளிப் பயணம் செய்து தி.மு.க., ஆட்சியின் அவலங்களைக் கூறுவேன். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.
#BREAKING || டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என வருடத்திற்கு ரூ.3600 கோடி ஊழல் செய்கிறது திமுக
— Thanthi TV (@ThanthiTV) December 15, 2024
எவ்வளவு தூரம் ஸ்டாலின் நெருக்கடி கொடுக்கிறாரோ, அவ்வளவு தூரம் அதிமுக வளரும் - ஈபிஎஸ்#EdappadiPalaniswami #EdappadiPalanisami #AIADMK #DMK #AIADMKMeeting #Tasmac pic.twitter.com/Xk9CxRubMi
#BREAKING || டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என வருடத்திற்கு ரூ.3600 கோடி ஊழல் செய்கிறது திமுக
— Thanthi TV (@ThanthiTV) December 15, 2024
எவ்வளவு தூரம் ஸ்டாலின் நெருக்கடி கொடுக்கிறாரோ, அவ்வளவு தூரம் அதிமுக வளரும் - ஈபிஎஸ்#EdappadiPalaniswami #EdappadiPalanisami #AIADMK #DMK #AIADMKMeeting #Tasmac pic.twitter.com/Xk9CxRubMi