அதிரடி முடிவு... மாவட்டம் வாரியாக நேரில் ஆய்வு செய்ய உள்ள முதல்வர்!

அதிரடி முடிவு... மாவட்டம் வாரியாக நேரில் ஆய்வு செய்ய உள்ள முதல்வர்!

அதிரடி முடிவு... மாவட்டம் வாரியாக நேரில் ஆய்வு செய்ய உள்ள முதல்வர்!
X

கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது என தமிழகம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தீவிர பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது என தமிழகம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்தும் கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it