மின் கட்டணம் கடும் உயர்வு! இது தமிழகத்திற்கு அல்ல 

 | 

கொரோனா 2வது அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டுள்ளது. சில பகுதிகளில் பாதிப்புக்கள் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளன. மின்சார வினியோக நிறுவனங்கள் நிர்வாக செலவுகள் மற்றும் கொள்முதல் செலவுகள் அதிகரித்து இருப்பதால் கர்நாடகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “கர்நாடகத்தில் உள்ள மின்சார வினியோக நிறுவனங்கள் மின் கட்டணத்தை சராசரியாக 17.31 சதவீதம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. சராசரியாக ஒரு யூனிட்டுக்கு மின்கட்டணத்தை 30 காசுகள் உயர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு மின்சார வினியோக நிறுவனங்கள் வட்டி விதிக்கக் கூடாது.

இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை அக்டோபர், நவம்பர் மாத கட்டணத்துடன் சேர்த்து வசூலித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும், தேர்தல் விதிமுறைகள் அமுலில் இருந்ததாலும் சரியான நேரத்தில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. மின்சார வினியோக நிறுவனங்களுக்கு மின் கொள்முதல் செலவு அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிர்வாக செலவு, முதலீட்டு திட்ட செலவு, அதற்காக பெறப்படும் கடன்களை அடைக்க ஆகும் செலவு ஆகியவற்றின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கு நேரத்தில் தகுந்த வேலைவாய்ப்புக்கள் ஏதுமின்றி மக்கள் தவித்து வரும் வேளையில் கர்நாடக அரசு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP