1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அமல் – தமிழக அரசு திடீர் உத்தரவு!!

இன்று முதல் அமல் – தமிழக அரசு திடீர் உத்தரவு!!


சென்னை விமான நிலையத்தில், கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுக்க சீனா, தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனை முடிவுகள் வரும் வரை, பயணிகளை விமான நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்திள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விமான பயணிகளுக்கான பரிசோதனை முடிவுகளை ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை அடுத்து விமான நிலையத்தில், கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமல் – தமிழக அரசு திடீர் உத்தரவு!!

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் தூரித பரிசோதனைக்கு 3,400 ரூபாயும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது துரித பரிசோதனை கட்டணம் 2,900 ரூபாயாகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 600 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 11 நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னைக்கு வரும் விமானங்களில், நாள் ஒன்றுக்கு சராசரி.யாக 750 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like