டெல்லி பெய்த பேய் மழையால் , பாலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பேருந்து சிக்கியது !! பரவும் வீடியோ

X

டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்லி நொய்டா பகுதி, தீன் மூர்த்தி சாலை, மின்டோ சாலை பகுதி, கீர்த்தி நகர் பகுதி, திலக் பாலம், மின்டோ பாலம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.

சில இடங்களில் வெள்ள நீரானது தேங்கி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மின்டோ பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் , பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர்.

இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்றனர். அதற்குள், பேருந்து நீருக்குள் முக்கால்வாசிக்கும் மேல் மூழ்கியிருந்தது. பின்னர் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். எனினும், பேருந்தின் அருகே உடல் ஒன்று மீட்கப்பட்டது.

Newstm.in

Next Story
Share it