எம்.ஜி.ஆர் அண்ணன் மகள் லீலாவதி மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல் ..!!

 | 

எம்ஜிஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி.இவர் கடந்த 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தன்னுடைய ஒரு சிறுநீகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் தான் இந்த லீலாவதி.

37 ஆண்டுகள் ஒற்றை சிறுநீரகத்துடன் வாழ்ந்து வந்தவர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் காலமானார். 

இவரது மறைவிற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் இன்று வெளியிட்ட இரங்கல் பதிவில், ''எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித் தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது தன்னுடைய சிறுநீரகத்தை அவருக்கு அளித்த பெருமைக்குரிய லீலாவதியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP