1. Home
  2. தமிழ்நாடு

டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் படம் கைவிடப்போவதாக தகவல்..!!

Q

யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே, விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர். அவருக்கு வரும் அக்டோபர் 16- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியூபர் டி.டி.எப்.வாசனின் பைக்’கை எரித்து விட வேண்டும். விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும் என தெரிவித்தனர். அதே சமயம் அப்போது ரூ.3 லட்சம் மதிப்புள்ள பாடுகாப்பு உடையால் உயிர் தப்பியுள்ளார். இவரை பின் தொடரும் பலர் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், திருட்டு சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர் என ஜாமின் மனுவுக்கு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் மஞ்சள் வீரன் படம் கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது 

ஏற்கனவே அவருக்கு 10ஆண்டுகள் பைக் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like