நிலவேம்பு , கபசுர குடிநீர் குடிக்கலாம் !! தமிழக அரசு அறிவிப்பு

நிலவேம்பு , கபசுர குடிநீர் குடிக்கலாம் !! தமிழக அரசு அறிவிப்பு

நிலவேம்பு , கபசுர குடிநீர் குடிக்கலாம் !! தமிழக அரசு அறிவிப்பு
X

கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு தடுப்பு மருந்து , குணப்படுத்தும் மருந்துகளை கண்டறிய உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று எம்.ஜி.ஆர் மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ;

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறோம். முதல் கட்டமாக இதன் சோதனை வெற்றி பெற்றிருக்கிறது.அமெரிக்காவில் உள்ள தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவோம்.

இதன் அடுத்த கட்ட நகர்வு வெற்றி பெற்றால் , மருந்து சந்தைகளுக்கு வர 1 வருடம் ஆகும் என தெரிவித்தனர். இந்நிலையில் மக்களின் நலனை மேம்படுத்திட ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடல் நலத்தை பேணவும் நிலவேம்பு, கபசுர குடிநீர் குடிக்கலாம். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஆரோக்கியம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Newstm.in

Next Story
Share it