டாக்டர் சைமன் உடல் விவகாரம் !! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

டாக்டர் சைமன் உடல் விவகாரம் !! சென்னை மாநகராட்சி அறிவிப்பு

டாக்டர் சைமன் உடல் விவகாரம் !! சென்னை மாநகராட்சி அறிவிப்பு
X

கொரோனாவால் தமிழகத்தில் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவர்கள் , செவிலியர்கள் , என மருத்துவத்துறைகளில் சிறிதும் ஓயாமல் பணியாற்றி வருகின்றனர்.

சென்னை பிரபல தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சைமன். கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். கீழ்ப்பாக்கத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தனர்.

கற்களை வீசி தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதம் அடைந்தது.  இதையடுத்து, கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு அவரது உடல் வேலப்பன்சாவடியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற டாக்டர் சைமன் மனைவி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. சடலத்தை மீண்டும் வெளியில் எடுக்க முடியாது. வேறு இடத்தில் சடலத்தை அடக்கம் செய்வது என்பது பாதுகாப்பானது அல்ல என்று கூறி கோரிக்கையை சென்னை மாநகராட்சி நிராகரித்துள்ளது. தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதே என்று மனைவியும் அக்குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Newstm.in

Next Story
Share it