யாரும் நம்ப வேண்டாம்... அது வெறும் வதந்தி! அனுஷ்கா தரப்பின் அவசர விளக்கம்!

யாரும் நம்ப வேண்டாம்... அது வெறும் வதந்தி! அனுஷ்கா தரப்பின் அவசர விளக்கம்!

யாரும் நம்ப வேண்டாம்... அது வெறும் வதந்தி! அனுஷ்கா தரப்பின் அவசர விளக்கம்!
X

அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள நிசப்தம் படம் ஆன்லைனில்  நேரடியாக ரிலீஸ் செய்யப்படாது என படக்குழு அறிவித்துள்ளது.

கோனா வெங்கட் மற்றும் டி.ஜி. விஷ்வா தயாரிப்பில் ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன் மற்றும் ஹாலிவுட் நடிகரான மைக்கேல் மேடிசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நிசப்தம்.  படத்தின் பெயரை சைலன்ஸ் என மாற்றியமைத்து ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை நடிகர் மாதவன் வெளியிட்டார். ஆனால்,கொரோனா பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படம் ரிலீசாக முடியாமல் தள்ளிப் போய் இருக்கிறது.

இந்நிலையில், சைலன்ஸ் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் பரவின. ஆனால் அப்படி ரிலீஸ் செய்யவில்லை என்றும், அவை வெறும் வதந்தி என படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். 

newstm.in

Next Story
Share it