அஜித் பர்த்டே கொண்டாட்டங்கள்!! பதற்றத்தில் அஜித்!! தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

அஜித் பர்த்டே கொண்டாட்டங்கள்!! பதற்றத்தில் அஜித்!! தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

அஜித் பர்த்டே கொண்டாட்டங்கள்!! பதற்றத்தில் அஜித்!! தெறிக்கவிடும் ரசிகர்கள்!!
X

கொரோனா நேரத்தில் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாமென அஜித் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் ட்வீட் செய்துள்ளார்.

மே 1ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பொதுவான டிபி பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கொண்டாடலாம் என திட்டமிட்டு இருந்தனர். இதற்காக உருவாக்கப்பட்ட பொதுவான காமென் டிபியை ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, அருண் விஜய், ஆதவ் கண்ணதாசன் என மொத்தம் 14 பிரபலங்களை கொண்டு வெளியிட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.


இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள இந்த நேரத்தில் காமென் டிபி கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாமென அஜித் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டதாக ஆதவ் கண்ணதாசன் ட்வீட் செய்துள்ளார். ஒரு ரசிகனாக, ஒரு நடிகனாக அவரது வார்த்தைக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன், இது அஜித்தின் வேண்டுகோள், அவரது வார்த்தைகளுக்கு நாம் மதிப்பு கொடுப்போம் என அவர் கூறியுள்ளார். 

ஆனாலும், அஜித் ரசிகர்கள் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், வாட்ஸ்-அப், பேஸ்-புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிட்டு இரு தினங்களுக்கு  முன்பிருந்தே கொண்டாட்டங்களை துவங்கி விட்டனர். அது சரி, வருஷத்துக்கொரு முறை வருகிற பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போல தானே அவர்களுக்கு மே முதல் தினம்?

வாழ்த்துக்கள் தல!

newstm.in

Tags:
Next Story
Share it