"பெண்கள் வாய்ப்பு தேடி ஏமாறாதீர்கள்" : எச்சரிக்கும் பிரபல நடிகை!

"பெண்கள் வாய்ப்பு தேடி ஏமாறாதீர்கள்" : எச்சரிக்கும் பிரபல நடிகை!

பெண்கள் வாய்ப்பு தேடி ஏமாறாதீர்கள் : எச்சரிக்கும் பிரபல நடிகை!
X

பெண்கள் சினிமா வாய்ப்பு தேடி ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னைப் போல் வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார். சினிமா அழகியலான உலகம்,  பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள் என்று கூறியுள்ளார். 

newstm.in

Next Story
Share it