1. Home
  2. தமிழ்நாடு

காற்றின் மூலம் கொரோனா பரவுகிறதா..? - முதல்வர் பழனிசாமி விளக்கம் !

காற்றின் மூலம் கொரோனா பரவுகிறதா..? - முதல்வர் பழனிசாமி விளக்கம் !


சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் நேற்று கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எய்ம்ஸ், ஜிப்மர் போன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

மேலும் காற்றின் மூலம் கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக்கூறினார். 

காற்றின் மூலம் கொரோனா பரவுகிறதா..? - முதல்வர் பழனிசாமி விளக்கம் !

ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை அளித்து வருகிறோம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். மைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா சமூக தொற்று ஏற்படவில்லை. நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

நோய் பரவலை தடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே அரசு செயல்பட்டு வருகிறது என்றார். 

newstm.in 

Trending News

Latest News

You May Like