மருத்துவர்கள் கொரோனா பணியில் இறந்தால் ரூ 1 கோடி இழப்பீடு !! மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர்கள் கொரோனா பணியில் இறந்தால் ரூ 1 கோடி இழப்பீடு !! மருத்துவர்கள் சங்கம்

மருத்துவர்கள் கொரோனா பணியில் இறந்தால் ரூ 1 கோடி இழப்பீடு !! மருத்துவர்கள் சங்கம்
X

கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர்கள் ,மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும், கொரோனா தடுப்புப் பணியில் அவர்கள் இறந்தால் ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்,அவர்கள் இறந்தால் அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

அவர்களை பாதுகாக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நாளை ( 22.04 .20 புதன்) இரவு 9.00 மணிக்கு ,நாடு தழுவிய முறையில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விழிப்புணர்வு இயக்கம் நடத்துகின்றனர்.

இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ,தமிழக மக்களும்,அனைத்து அரசியல் கட்சிகளும்,வெகுமக்கள் அமைப்புகளும் ,சமூக இடைவெளி விட்டு ,தங்கள் வீட்டு வாசலிலோ,மொட்டை மாடியிலோ 10 நிமிடங்களுக்கு மெழுகுவர்த்தி அல்லது டார்ச் லைட் ஏந்தி ஆதரவு தர வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it