கொரோனாவால் மருத்துவர் இறப்பு... இனியும் அரசுக்கு அலட்சியம் வேணடாம் - ஸ்டாலின்

கொரோனாவால் மருத்துவர் இறப்பு... இனியும் அரசுக்கு அலட்சியம் வேணடாம் - ஸ்டாலின்

கொரோனாவால் மருத்துவர் இறப்பு... இனியும் அரசுக்கு அலட்சியம் வேணடாம் - ஸ்டாலின்
X

மக்கள் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள், ஊடகத்தினருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கவலை அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், கொரோனா வைரஸால் உயிரிழந்த மருத்துவர் குடும்பத்தினருக்கு இரங்கல் ஆறுதல் தெரிவித்துள்ளார். மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள், ஊடகத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

மூன்று நாட்களில் தமிழகத்தில் கொரோனா ஒழிந்துவிடும் என முதலமைச்சர் கூறிய நிலையில், நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

மருத்துவரின் உயிரிழப்பு என்பது அரசு அவசரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை காட்டுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விரைவு பரிசோதனைக் கருவிகள் மூலம் கொரோனா தொற்றின் அளவை மதிப்பிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், நோய்த்தொற்றிலிருந்து மக்களை காக்கும் வகையில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகளின்படி, மக்கள் தனித்திருந்து தற்காத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in 

Next Story
Share it