1. Home
  2. தமிழ்நாடு

இம்மர்ஷன் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த தவறுகளை தவிர்க்கவும்!

1

நம்மில்  பலர் வாட்டர் ஹீட்டர் கம்பிகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் அவை குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த கம்பிகளை நாம் சரியான வழியில் பயன்படுத்தாவிட்டால் ஆபத்து ஏற்படலாம். இதன் மூலம் ஷாக் அடித்து இறந்தவர்களுக்கு உள்ளனர். 

பழைய கம்பிகளைப் பயன்படுத்தாதீர்கள்: தண்ணீரைச் சூடாக்க வேண்டும் என்றால், தேய்ந்த அல்லது பழைய வாட்டர் ஹீட்டர் கம்பிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

பொருத்தமான வாளியை பயன்படுத்தவும்: வாட்டர் ஹீட்டர் கம்பிகளை எப்போதும் ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைக்கவும். இரும்பு வாளிகள் ஆபத்தானவை என்பதால் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பாதுகாப்பாக ஸ்விட்ச் ஆன் செய்யவும்: கேபிள் ஏற்கனவே தண்ணீரில் இருக்கும் போது மட்டுமே வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யவும். ஆன் செய்த பிறகு வாளியை தொட வேண்டாம்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம்: ஹீட்டர் பயன்பாட்டில் இருக்கும் போது வாளியில் தண்ணீர் குறைவாக இருந்தால் அதில் மேற்கொண்டு தண்ணீர் சேர்க்க வேண்டாம். இது கடுமையான மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

வெந்நீரைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்: ஹீட்டர் இயங்கும் போது வாளியில் இருந்து சூடான நீரை எடுப்பதைத் தவிர்க்கவும். வாட்டர் ஹீட்டரை அனைத்து விட்டு எடுப்பது நல்லது.

அகற்றுவதை அவசரப்படுத்த வேண்டாம்: தண்ணீர் சூடான உடனே வாட்டர் ஹீட்டர் கம்பியை எடுக்க வேண்டாம். தண்ணீரில் இருந்து வாட்டர் ஹீட்டரை அகற்றுவதற்கு முன் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.

தண்ணீரை அதிக சூடாக்க வேண்டாம்: சிலர் வாட்டர் ஹீட்டர் கம்பிகளை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருக்கின்றனர். ஆனால் இது பாதுகாப்பற்றது. தண்ணீர் போதுமான அளவு சூடாக இருக்கும் போதே எடுக்க வேண்டும்.

புதிதாக வாங்கும் போது: வாட்டர் ஹீட்டர் கம்பியை புதிதாக வாங்கும் போது கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஐஎஸ்ஐ சீல் இருக்கிறதா? 1500 முதல் 2000 வாட்ஸ் மற்றும் 230-250 வோல்ட் வரை இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தவும்.

போதுமான தண்ணீரை நிரப்பவும்: வாட்டர் ஹீட்டர் கம்பி தண்ணீருக்கு அடியில் இருக்கும்படி வாளியில் போதுமான தண்ணீரை வைக்க உறுதி செய்யவும். இப்படிச் செய்தால், வாட்டர் ஹீட்டர் வயர்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதோடு, விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும் முடியும்.

Trending News

Latest News

You May Like