1. Home
  2. தமிழ்நாடு

பான் 2.0 கார்டு வேண்டுமா.. ரொம்ப ஈஸியா பெறலாம்: இதை மட்டும் செய்தால் போதும்!

1

பான் 2.0 திட்டத்தை ஒன்றிய அரசு துவங்கியுள்ளது. இதன் மூலம் QR கோடுடன் பான் கார்டு வழ்ங்கப்படுகிறது. இதனால் பான் கார்டு மூலமாக நடக்கும் முறைகேடுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் பயன்படுத்துவது தடுக்கப்படும். இந்த புதிய QR கோடுடன் கூடிய பான் கார்டை மெயில் மூலமாக பெறலாம்.

இதற்கு NSDL அல்லது UTI-ஆல் பான் கார்டு வழங்கப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும். பான் அட்டையின் பின்புறத்தில் இந்த தகவல் அச்சிடப்பட்டிருக்கும்.

இதனையடுத்து மெயில் மூலமாக புதிய பான் கார்டை பெறுவதற்கு NSDL-இன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதனையடுத்து ஆதார் மற்றும் போன் நம்பர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும்.

அதன்பின்னர் தகவல்களை சர்பார்த்து ஓடிபி முறையை தேர்ந்தெடுத்து, அந்த செயல்முறையையும் நிறைவு செய்யவும். இதனையடுத்து கட்டண முறையை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி முடிக்கவும். இந்த செயல்முறைகளை நிறைவு செய்வதை தொடர்ந்து, அடுத்த 15 நிமிடங்களில் சம்பந்தப்பட்டவர் மின்னஞ்சல் முகவரிக்கு புதிய QR கோடுடன் கூடிய பான் கார்டை பெறலாம்.

இதே போன்ற செயல்முறையை செய்து UTIITSL அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் பான் 2.0 கார்டு கிடைக்கும். மேலும், பான் அட்டையாக பெற விரும்பினால், இதற்காக ரூ. 50 கட்டணமாக செலுத்தி QR கோடுடன் கூடிய புதிய பான் கார்டை பெறலாம்.

Trending News

Latest News

You May Like