வாடகை வீட்டில் வசிப்போரா நீங்கள்..? உங்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு..!

 | 

இந்தியாவில் இன்று, ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது, அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அத்துடன், வங்கிக் கணக்கு, பான் கார்டு, வருமான வரித் தாக்கல் உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாமல் ஒரு சிம் கார்டு கூட வாங்க முடியாது. அந்த அளவிற்கு ஆதார் கார்டின் தேவை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடு மாறும்போது ஆதாரிலுள்ள முகவரியையும் மாற்ற வேண்டும். இதற்காக நீங்கள் வேறு எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம் என்று தனிநபர் தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு, முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Address Request-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு Update Address என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர், ஆதார் எண்ணை உள்ளிட்டு Login செய்து விவரங்களை நிரப்ப வேண்டும். இதை செய்வதன் மூலம், ஓரிரு நாட்களில் உங்கள் ஆதார் முகவரி மாறி விடும்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP