1. Home
  2. தமிழ்நாடு

பாகுபலி கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

பாகுபலி கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?


பாகுபலி படத்தின் முக்கிய கேரக்டரான கட்டப்பா கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர் என தெரியவந்துள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி திபை்படம் இந்திய சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க் திரைப்படமாக உருவாகிவிட்டது. இந்தப் படத்தின் மூலம் ராணாவும் பிரபாஸூம் இந்திய அளவில் பிரபலமானார்கள். இந்தப் படத்தில் சத்யராஜ் கட்டப்பா கேரக்டரில் நடித்திருப்பார். பாகுபலி படத்தில் கட்டப்பா மிக முக்கிய கதாபாத்திரம். 


இந்தக் கட்டப்பா கேரக்டரில், முதலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தைதான் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் இயக்குனர் ராஜமவுலி. ஆனால், சஞ்சய் தத் அந்த காலகட்டத்தில் சிறையில் இருந்ததால், அவர் நடிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பின், சத்யராஜை தேர்வு செய்ததுள்ளார். இதை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி ஸ்கிரிப்ட் டைரட்டருமான விஜயேந்திர பிரசாத், பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் கேரக்டரில் சத்யராஜ் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என விஜயேந்திர பிரசாத் கூறியிருக்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like