அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது தெரியுமா ?
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் மொத்த வாக்காளர்கள் 6,36,12,950 கோடி எனத் தெரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர்கள் 3.24 கோடி, 3ஆம் பாலினத்தவர் 9, 120 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்(நாகை) தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 1,76,505 வாக்காளர்களும், அதற்கு அடுத்த இடத்தில் துறைமுகம்(சென்னை) 1,78,980 வாக்காளர்களும் உள்ளனர். அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் கவுண்டம்பாளையம்(கோவை) தொகுதியில் மொத்தம் 4,91,143 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டும் நமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ளலாம்.