சென்னையில் அதிகமான கொரோனா பாதிப்பு எங்க தெரியுமா ? விவரங்களை வெளியிட்ட மாநகராட்சி

சென்னையில் அதிகமான கொரோனா பாதிப்பு எங்க தெரியுமா ? விவரங்களை வெளியிட்ட மாநகராட்சி

சென்னையில் அதிகமான கொரோனா பாதிப்பு எங்க தெரியுமா ? விவரங்களை வெளியிட்ட மாநகராட்சி
X

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் , கொரோனா பாதிப்புக்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.  1,323 பேர் பாதிப்படைந்து உள்ளனர். சென்னையில் பாதிப்பு குறித்து மண்டல வாரியாக சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்து உள்ளது.

இதன்படி சென்னை ராயபுரம் (73) கொரோனா பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, திரு.வி.க. நகர் (33), கோடம்பாக்கம் (26), அண்ணா நகர் (24), தண்டையார்பேட்டை (20), தேனாம்பேட்டை (19) கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.

இதே போன்று அடையாறு , பெருங்குடியில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கம் , திருவொற்றியூரில் தலா 5 பேருக்கும், மாதவரம் , ஆலந்தூரில் தலா 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உள்ளன. 

மணலி மற்றும் அம்பத்தூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதித்தவர்களின் எண்னிக்கை அதிகமாக உள்ளது. 2 வதாக கோவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

Next Story
Share it