இன்று மாலை பிரதமர் என்ன பேசப் போகிறார் தெரியுமா?

இன்று மாலை பிரதமர் என்ன பேசப் போகிறார் தெரியுமா?

இன்று மாலை பிரதமர் என்ன பேசப் போகிறார் தெரியுமா?
X

இந்தியாவில் தற்போது இருக்கும் இரண்டு பெரும் பிரச்னைகள் கொரோனா மற்றும் லடாக் எல்லை விவகாரம். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார். 

பிரதமரின் ஒவ்வொரு உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், இன்று அவர் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் எல்லோர் மத்தியிலும் எழுந்திருப்பது இயல்புதான். இதற்கு முன்பு பொதுமுடக்கம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் உரையாற்றி வந்தார்.  ஆனால் அடுத்த பொதுமுடக்க நீட்டிப்பு நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, இன்றைய உரையில் பிரதமர் சீனா மீதான நடவடிக்கை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த மனதில் குரல் நிகழ்ச்சயில் பேசிய பிரதமர், சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில் சீனாவின் 59 செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மோடி அதுகுறித்து பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it