புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?
X

புதன் என்றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக்காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று ஜோதிடர்கள் அழைத்தனர். சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரியனைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன்.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்களாக இருப்பதுடன் வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் படத்தவர்களாக விளங்குவதுடன் அரிய பெரிய நூல்களை விரும்பி படித்துவிடுவார்கள்.ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடார். எதையும் திறம்படச் செய்ய விரும்பும் கொள்கை உடையவர்கள். மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அதே நேரம் அழுத்தந்திருத்தமாக எடுத்துக் கூறிடுவர். மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர். மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர். தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந்தஸ்தைத் தேடியடைந்திடுவர். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது. தங்களுக்கு என தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வர்.

இப்படி பலச் சிறப்பான குணங்களை கொண்டவர்கள் புரட்டாசியில் பிறந்தவர்கள்.

Tags:
Next Story
Share it