1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? பெண்கள் வாழைப்பூவை தவறாமல் வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால்...

1

வாழைப்பூவின் ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சிக்குவோமா..?

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நமது உணவு பழக்க வழக்கங்களால் உடல் பருமன் ஏற்பட்டு இளம்வயதிலேயே நடக்கக்கூட முடியாமல் பலர் இருக்கின்றனர். உடல் எடையை குறைக்க எவ்ளோ முயற்சி எடுத்துட்டேன். ஒன்னும் முடியல..என்று சலித்துக்கொள்கிறீர்களா?

அப்படி என்றால் வாழைப்பூவை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள். வாழைப்பூவை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி அதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

மன அழுத்தம் நீங்கும்

வாழைப்பூவில் உள்ள மெக்னீசியம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அதில் உள்ள மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் மன அழுத்தத்தை நீக்கவும், மனநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. அதிக வேலை மற்றும் பணிச் சுமை காரணமாக நீங்கள் மன அழுத்த நிலையில் இருந்தால், வாழைப்பூவை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்க்கு சிறந்தது

வாழைப்பூ குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரையின் அளவை பெருமளவு கட்டுப்படுத்தலாம். இன்றைய வாழ்க்கைச் சூழலில் பத்தில் ஐந்து பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் வாழைப்பூவை உணவில் தொடர்ந்து சேர்த்து வாருங்கள்.

இரும்புச் சத்து நிறைந்தது

வாழைப்பூவில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. இது ஹீமோகுளோபின் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது. இதை வாரம் வரும் முறை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனையையும் குறைக்கலாம். மேலும் இதில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E போன்ற ஏராளமான சத்துக்களும் உள்ளன.

Health Benefits of Vazhaipoo in Tamil
மேலும் வாழைப்பூவில் வைட்டமின் ஏ, வைட்டமின்பி, வைட்டமின் சி, கால்சியம் ,மெக்னீசியம் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன.

  • வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சுவை உடலுக்கு வைட்டமின் பி சத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
    மூல நோய் ஏற்படாமல் தடுக்கும்.
    வாழை பூ ரசம் வறட்டு இருமலை குணப்படுத்தும்.
    வாழைப்பூ இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
    சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
    செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

அதனால் இனிமேல் வாழைப்பூவை பார்த்தால் வாங்காமல் விடாதீர்கள்.

Trending News

Latest News

You May Like