பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் கேட்கும் சம்பளம் தெரியுமா?

பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் கேட்கும் சம்பளம் தெரியுமா?

பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் கேட்கும் சம்பளம் தெரியுமா?
X

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் உலக அளவில் சிறந்த ஒரு நடிகர். பன்முகத்திறமை கொண்ட அவர் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தொகுப்பாளராகவும் அறிமுகமானார். கமல் தொகுத்து வழங்கியதால் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் அடைந்தது. 

மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங் தள்ளிப்போகும் நிலை உள்ளது. இதனிடையே சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சியும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது சீசனையும் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


மூன்றாவது சீசன் தொகுத்து வழங்க ரூபாய் 15 கோடி சம்பளம் வாங்கிய கமல்ஹாசன் தற்போது நான்காவது சீசனை தொகுத்து வழங்க சம்பளத்தில் ரூபாய் 10 கோடி‌ உயர்த்தி ரூபாய் 25 கோடியாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் பிக் பாஸ் சீசன் 4-ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

newstm.in

Next Story
Share it